பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தனியார் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, உடல் பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

Advertisment

அதற்கு காரணமாக தன் வாழ்க்கையில் தனக்கு நேர்ந்து பாதிப்புகளை சொல்லி விளக்கினார். “நான் காசநோய் பாதிப்பில் இருந்து தப்பி இருக்கிறேன். ஹெபடைடிஸ் பி பிரச்சினையில் இருந்தும் மீண்டேன். எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லி உடல் பரிசோதனை செய்துகொள்வது சம்பந்தமான விழிப்புணர்வுகளை பரப்பி வருகிறேன்.

a

எனது உடலில் தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டது. மீதி 20 சதவீத கல்லீரலோடுதான் நான் வாழ்ந்து வருகிறேன். எல்லா நோய்களுக்குமே சிகிச்சை இருக்கிறது. எனக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது கூட 8 வருடங்கள் வரை தெரியாது.

Advertisment

எனக்கு வந்த இந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் வரலாம் என்று கூறி வருகிறேன். உடல் பரிசோதனைகள் செய்து கொள்ளவில்லை என்றால் இதுபோன்ற நோய் பாதிப்புகள் உங்களுக்கு எப்போதுமே தெரியாமல் போய்விடும். அதற்கான சிகிச்சையையும் பெற முடியாது”என்று தெரிவித்தார்.