டெல்லியில் நடிகர் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் அமிதாப்பச்சனுக்கு இன்று தற்போது டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காய்ச்சலால் 66 வது தேசிய திரைப்பட விருது விழாவில் நடிகர் அமிதாப்பச்சனால்பங்கேற்க முடியவில்லை, இந்நிலையில் தற்போதுஇன்று அந்த விருதை அவர் பெற்றார்.