பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் அமிதாப் பச்சன், விவசாயிகளின் கடன்களை தம்மால் இயன்றவரை அடைப்பதாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து மஹாராஷ்ட்ர மாநிலத்தை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கி கடனை அமிதாப் செலுத்தினார். தற்போது, உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 1,398 விவசாயிகளின் கடன்களான நான்கு கோடி ரூபாயை செலுத்துவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த கடன் உதவியை செலுத்துவதற்காக உபியை சேர்ந்த 70 விவசாயிகளை நேரில் அழைத்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்தே இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.