நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணபுரம் என்ற இடத்தில் வசித்து வரும் வயதான தம்பதிகளான சண்முகவேல் வயது 75, அவரது மனைவி செந்தாமரை வயது 65. இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு எட்டு மணி அளவில் வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்த சண்முகவேலை பின்னே இருந்து கொள்ளையன் ஒருவன் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி இருக்கிறான்.

Advertisment

nellai

சத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்து கொள்ளையனை கீழே கிடந்த பொருட்களால் தாக்க, இன்னொரு கொள்ளையனும் அந்த இடத்திற்கு வந்தான். இதனிடையே சேரை தூக்கி சண்முகவேல் கொள்ளையனை அடித்ததினால் கொள்ளையனின் பிடி தளர்ந்தது. சுதாரித்துக்கொண்ட சண்முகவேல் மேலும் கீழே கிடந்த பொருட்களை எடுத்து அவர்களை தாக்கினார். செந்தாமரைக்கு காயம் ஏற்பட செந்தாமரை அணிந்திருந்த 35 கிராம் நகையை அறுத்துக்கொண்டு வெளியே கொள்ளையர்கள் தப்பித்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டு கொள்ளையர்களையும் தம்பதிகள் சேர்ந்து விரட்டினர்.

அவர்களது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் இக்காட்சிகள் அதில் தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த ஆதாரங்களுடன் அந்த தம்பதியினர் கடையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இந்த சிசிடிவி காட்சியானது இந்தியா முழுவதும் தற்போது வைரலாகியுள்ளது. பலரும் அந்த வீர தம்பதியினரை பாராட்டி வருகிறார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் இந்த வீடியோவை பகிர்ந்து பிராவோ என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஹர்பஜன் சிங் வழக்கம்போல் தமிழில் இந்த வீர தம்பதியை வாழ்த்தியுள்ளார்.