2014-19 நாட்டின் பொற்காலம்- பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் விழாவில் அமித் ஷா பேச்சு...

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

amit shah speech in bjp manifesto releasing function

இந்நிலையில் பாஜக "சங்கல்ப் பத்ரா" எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய அமித் ஷா, " 2014-19 நாட்டின் பொற்காலம். ஏழைகளுக்காக ஓய்வில்லாமல் உழைத்தவர பிரதமர் நரேந்திர மோடி. இந்திய நாட்டின் பாதுகாப்பை மோடி தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளது. அதுமட்டுமல்ல மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட பிரதமராக மோடி விளங்குகிறார்" என தெரிவித்தார்.

loksabha election2019
இதையும் படியுங்கள்
Subscribe