Advertisment

ஊரடங்கு நீட்டிப்பா..? மாநில முதல்வர்களின் கருத்தைக் கேட்ட அமித்ஷா!

gh

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 59 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

Advertisment

இந்தியாவில் அதன் தாக்கம் என்பது கடந்த சில வாரங்களாக அதிக அளவில் இருந்து வருகின்றது. மராட்டியம், தமிழகம், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று விதிகம் என்பது தினந்தோறும் அதிகரித்து வந்த வண்ணம் இருக்கின்றது. இதுவரை இந்தியாவில் 1,65,799 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் அவர்களில் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீடிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதற்கிடையே மாநில முதல்வர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேசியுள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அமித்ஷா அவர்களிடம் விவாதித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு பற்றிய அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Advertisment

lockdown
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe