Advertisment

நாகரிகமான இந்த சமுதாயத்தில் வாழ அவர் தகுதியற்றவர்; அமித் ஷா பற்றி கருத்து கூறியவருக்கு பாஜக பதிலடி...

dhgt

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பன்றிக்காய்ச்சல் காரணமாக, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாகச் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் எம்.பி.யும், காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளருமான ஹரிபிரசாத் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் டெல்லியிலிருந்து மீண்டும் கர்நாடகத்துக்குத் திரும்பிவிட்டனர். மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை சரியாகிவிட்டதால், அந்த பயத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது என கூறியிருந்தார். அவரின் இந்த கருத்திற்கு கர்நாடக பாஜக தற்போது பதிலளித்துள்ளது. அமித் ஷாவின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் எம்.பி. ஹரிபிரசாத்தின் கருத்து, அவரின் மோசமான மனநிலையை தான் காட்டுகிறது. அவர் முதலில் மனிதத்தன்மையை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நாகரிகமான இந்த சமுதாயத்தில் வாழ இவர் தகுதியற்றவர். அவரை உடனே மனநல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவேண்டும் என ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

congress amithshah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe