மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அவர் போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் இன்று வேம்புமனு தாக்கல் செய்தார். 1998 முதல் இதுவரை அத்வானி வசம் இருந்த அந்த தொகுதி இந்த முறை அமித் ஷா வுக்கு வழங்கப்பட்டது. மேலும் அமித் ஷா மக்களவை தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.