Advertisment

“ஒரு தமிழர் ஒடிசா முதல்வராக வேண்டுமா?” - அமித்ஷா விமர்சனம்

Amit shah cricticized if Tamil person to be Chief Minister of Odisha?

நாடாளுமன்றத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக தொடங்கப்பட்ட வாக்குப்பதிவானது மே 25ஆம் தேதி வரை ஆறு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இறுதிக் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி மீதமுள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடைசி கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது, “பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றிப் பேச வேண்டாம் என்றும் கூறுகிறது. நவீன் பட்நாயக் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நான் சொல்வதைக் கேளுங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது. நாங்கள் அதைத்திரும்பப் பெறுவோம்.

Advertisment

ஜூன்ன் 4 ஆம் தேதிக்குப் பிறகு நவீன் பட்நாயக் முதலமைச்சராக இருக்க மாட்டார். அவர் ஒடிசாவின் முன்னாள் முதல்வராக இருப்பார். 147 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 75 இடங்களுக்கு மேல் பெற்று மாநிலத்தில் பா.ஜ.க அடுத்த அரசாங்கத்தை அமைக்கும். அடுத்த முதல்வர், ஒடிசாவில் சரளமாக பேசுவதையும், மாநிலத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புரிந்துகொள்வதையும் பா.ஜ.க உறுதி செய்யும்.

நாடு முழுவதும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கொண்டாடப்பட்டபோது, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், அவரது அரசியல் வாரிசாக வரவிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரும் (வி.கே.பாண்டியன்) ஒடிசா மக்களைத் தடுக்க முயன்றனர். சொல்லுங்கள், ராம பக்தர்களைத்தடுக்க முயன்ற ஒருவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முடியுமா? ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக முடியுமா? ஒடிசாவில் வசிக்கும் ஒடியா பேசும் இளம் முதல்வரை நரேந்திர மோடி உங்களுக்குக் கொண்டு வருவார். தாமரை சின்னத்திற்கு ஆதரவாக உங்கள் வாக்கை அளிப்பதன் மூலம், ஒரு அதிகாரிக்கு பதிலாக மாநிலத்தை ஆள ஒரு ஜன சேவக்கை கொண்டு வாருங்கள். ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்ததும், இளைஞர்கள் வேறு எங்கும் வேலை தேடாமல் இருக்க தொழிற்சாலைகளை அமைப்போம்” என்று கூறினார்.

AmitShah Jharkhand
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe