Amit Shah appeals to the people of the country on Independence Day

இந்தியா முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

Advertisment

இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தனது சமுக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ பிரதமர் நரேந்திர மோடியின் HarGharTiranga பிரச்சாரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. இது தேசத்தில் உள்ள ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை ஒற்றுமையை எழுப்புகிறது. இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்தவும், மீண்டும் அதே ஆர்வத்துடன் இதில் பங்கேற்கவும் அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

Advertisment

உங்களுடைய வீடுகளில், நம்முடைய பெருமையான மூவர்ணக் கொடியை ஏற்றுங்கள். அந்த மூவர்ணக் கொடியுடன் செல்பி புகைப்படம் எடுத்து அதனை https://harghartiranga.com என்ற ஹர் கர் திரங்கா இணையதளத்தில் பதிவேற்றுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, வருகிற 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி அவரவர் வீடுகளிலும் மூவர்ணக்கொடியை ஏற்றி செல்பி எடுத்து அதற்கான இணையதளத்தில் பதிவேற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.