Skip to main content

கேரளா மற்றும் மேற்கு வங்க முதல்வர்கள் சர்ச்சைகளை கிளப்புகிறார்கள் - அமித்ஷா குற்றச்சாட்டு!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019


நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுதொடர்பாக இன்று பேட்டியளித்துள்ளார்.



என்ஆர்சி விவகாரத்தில் தேவையில்லாத சர்ச்சைகள் எழுந்துள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், குடிமக்கள் பதிவேட்டிற்கு எந்த தொடர்பும் இல்லை. கேரளா மற்றும் மேற்கு வங்க முதல்வர்கள் தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்துகிறார்கள். அரசியலுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்