ஆங்கிலேய காலத்தில் தனி ராணுவத்தையே உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் 1945 ஆம் ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்ததாக அதிகாரபூர்வமாக சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் சுதந்திரத்திற்கு பிறகும் நேதாஜி உத்தரப்பிரதேசத்தின் பைசாபாத் பகுதியில் கும்நாமி பாபா என்ற பெயரில் வாழ்ந்து வந்ததாக சிலர் கூறி வந்தனர். இதன் உண்மைத்தன்மையை அறிய இருவரின் கையெழுத்துக்களையும் ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆய்வு செய்ய கையெழுத்து ஆய்வில் 40 ஆண்டுகால அனுபவம் உள்ள, இதற்கு முன் சுமார் 5000 சோதனைகளை மேற்கொண்ட அமெரிக்காவின் கார்ல் பகதெட்டிடம் இருவரின் கையெழுத்துக்கள் உள்ள கடிதங்கள் கொடுக்கப்பட்டன. இதனை ஆய்வு செய்த அவர் இரண்டையும் எழுதியவர் ஒருவர் தான் என்றும், இரு கையெழுத்து அம்சங்களும் ஒத்து போகின்றன என்றும் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
மேலும் ரஷ்ய நாட்டில் நடந்த ஏதேனும் விபத்தாலோ அல்லது மனஅழுத்தத்தினாலோ ஏற்பட்ட சில மனரீதியானமாற்றங்களால் அவர் மீண்டும் இந்தியாவந்து இப்படி வாழ்ந்திருக்கலாம் எனவும் மனோதத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.