ADVERTISEMENT

'இஸ்ரோ'வுடன் இணைந்து பணியாற்ற தயார்- 'நாசா' அறிவிப்பு!

09:44 AM Sep 08, 2019 | santhoshb@nakk…

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-2 திட்டத்திற்காக இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாசா' பாராட்டு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT


நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ மேற்கொண்ட கடும் முயற்சியை நாசா பாராட்டியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நாசா பதிவிட்டுள்ள செய்தி குறிப்பில், "விண்வெளி ஆய்வு கடினமானது. நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்டத்திற்காக இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இதன் மூலம் நீங்கள் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள். மேலும் எதிர்காலத்தில் சூரியனை ஆய்வு செய்யும் திட்டங்களில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்" என்று நாசா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT



இதனிடையே சந்திரயான் 2 திட்டத்திற்காக இஸ்ரோ மேற்கொண்ட கடுமையான முயற்சிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT