பிரபல நடிகையின் பிரசவத்தின் போது ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் அந்த நடிகை உயிரை விட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் உள்ள ஹிங்கோலியைச் சேர்ந்தவர் பிரபல நடிகை பூஜா ஸுஞ்சாஅர்(25) , மராத்தி மொழிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவருக்கு என்று தனியாக பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூஜாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவருக்கு குழந்தை பிறந்தது.

Advertisment

actress

ஆனால் பிறந்த குழந்தை சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டது. பூஜாவின் உடல் நிலையும் மோசமாகவே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹுங்கேலி ஹெல்த் செண்டருக்கு அழைத்துச் செல்லுபடி அறிவுறுத்தினர். அந்த நேரத்தில் வேறு ஒரு ஆம்புலன்ஸும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. பிறகு நீண்ட நேரத்துக்கு பிறகு பூஜாவை அங்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பூஜா பரிதாபமாக உயிரிழந்தார்.ஆம்புலன்ஸ் உடனடியாக கிடைத்திருந்தால் பூஜா பிழைத்திருப்பார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment