சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை புனரமைக்கப்பட்டு, காவி நிறம் பூசப்பட்டுள்ளது.

Advertisment

உத்தரப்பிரதேசம் மாநிலம் புடவுனி கிராமத்தில் சில தினங்களுக்கு முன்னர் சட்டமேதை அம்பேத்கரின் சிலை, மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இந்த சிலை உடைப்பிற்குப் பின்னர், தற்போது மீண்டும் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் அதைப் பார்த்துஅதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment

அம்பேத்கர் எப்போதும் நீலநிற கோட் அணிந்தவாறு காட்சியளிப்பது வழக்கம். அவ்வாறே அவரது சிலைகளிலும் வண்ணம் பூசப்பட்டிருக்கும். ஆனால், தற்போது சீரமைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர் சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது.

Advertisment

இது பாஜகவின் நிற அரசியலைக் குறிப்பதாகவும், அம்பேத்கர் சிலையில் நிறத்தைக் காவியாக மாற்றுவதன் மூலம் மக்களுக்கு எந்தவித மாற்றங்களும் வந்துவிடப் போவதில்லை என்றும்எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதில் இருந்து, அங்குள்ள முதல்வர் இல்லம், அரசு அலுவலகங்கள், பள்ளி வாகனங்கள் என அனைத்தும் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டன. ‘காவி தூய்மையின் அடையாளம். காவியை எதிர்ப்பவர்கள் சூரியனின் நிறமான காவியையும் எதிர்க்க வேண்டும். குறுகிய மனநிலையில் மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள்’ என யோகி முன்னர் கூறியிருந்தார்.