/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sl3232.jpg)
இலங்கையில் பிரதமராக பதவியேற்றுவிருக்கும் ரணில் விக்ரமசிங்கேவை இந்தியாவுக்கான இலங்கை தூதர் கோபால் பாக்ளே இன்று (13/05/2022) நேரில் சந்தித்துப் பேசினார்.
பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட உடனேயே இந்திய தூதர் கோபால் பாக்ளே அவரைச் சந்தித்துப் பேசியதாகவும், ரணில் விக்ரமசிங்கேவைச் சந்தித்த முதல் வெளிநாட்டு தூதர் அவர் தான் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டவுடன் பேசிய ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுடன் தொடர்புகளை வலுப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திவிட்டதாக வெளியான தகவல்களை இந்திய தூதரகம் மறுத்திருக்கிறது. விசா வழங்கும் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைக்கு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)