தந்தை காங்கிரஸ், மகன் பாஜக: அம்பானி குடும்பத்தின் அரசியல்...

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.

ambani family supports both congress and bjp in loksabha election

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நேற்று மும்பையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் கலந்துகொண்ட ஆனந்த் அம்பானி இது பற்றி கூறுகையில், "நான் இங்கு மோடியின் உரையை கேட்கவும், நாட்டின் முன்னேற்றத்திற்கான எனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இதில் கலந்துகொண்டேன்" என கூறினார்.

ஆனந்த் அம்பானி பாஜக பொதுகூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில் இந்த மாத தொடக்கத்தில் ஆனந்த் அம்பானியின் தந்தையான முகேஷ் அம்பானி தெற்கு மும்பையின் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவை ஆதரிப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையும் மகனும் இருவேறு பெரும் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவர்களிடமிருந்துதான் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் கலாய்த்து கருத்து கூறி வருகின்றனர்.

loksabha election2019 mukesh ambani
இதையும் படியுங்கள்
Subscribe