தொழிலதிபர் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 103 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார். அம்பானியின் கடந்தாண்டு சொத்து மதிப்பை ஒப்பிடுகையில் இந்தாண்டு24 சதவிகிதம் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அம்பானிக்கு அடுத்ததாக இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக அதானி நிறுவனத்தின் கவுதம் அதானி உள்ளார். அதானியின் சொத்து மதிப்பு 83 பில்லியன் டாலராக உள்ளது. கடந்தாண்டு மட்டும் அவரது சொத்து மதிப்பு 49 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் நைகா நிறுவனர் ஃபால்குனி நாயர் பில்லியனர் வரிசையில் இணைந்துள்ளார்.