ADVERTISEMENT

புதிய ஆன்லைன் வர்த்தக விதி... அமேசானில் இருந்து நீக்கப்பட்ட பொருள்கள்...

05:51 PM Feb 02, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆன்லைன் நிறுவனங்கள் அதிகமான சலுகைகளை அள்ளி வழங்குவதாகவும், அதனால் உள்நாட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்து, கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி ஃப்லிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் அவை பங்கு வைத்துள்ள நிறுவனங்களின் பொருட்களை விற்கத் தடை விதித்து.


ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கும் கேஷ் பேக் சலுகைகள் நேர்மையாக இருக்க வேண்டும், எவ்வித பாகுபாடுகள் மற்றும் முறைகேடுகளிலும் ஈடுபடக்கூடாது என்ற புதிய விதிமுறைகளை அறிவித்தது. இது 2019-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட பொருள் தங்கள் தளங்களில் மட்டுமே பிரதேயகமாக விற்கப்படும் எனும் சலுகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.


அதன் அடிப்படையில் இன்று பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் இந்தியா, தனது பங்கு இருக்கும் நிறுவனங்களான க்ளவுட் டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற பொருள்களை தனது தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் அமேசான் நிறுவனத்தின் எக்கோ ஸ்பீக்கர்கள், வீட்டு உபயோக சுத்திகரிப்பு பொருள்கள் மற்றும் பேட்டரி போன்றவையும் நீக்கியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT