Advertisment

வீடு தேடிவரும் மது... விற்பனைக் களத்தில் இறங்கிய அமேசான்...

amazon got permission to deliver liquor to home

மேற்குவங்கத்தில் மதுபானங்களை ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் டெலிவரி செய்வதற்கான அனுமதியை அமேசான் மற்றும் பிக் பாஸ்கெட் நிறுவனங்கள் பெற்றுள்ள நிலையில், விரைவில் இந்தியா முழுவதும் இந்தசேவையை விரிவுபடுத்த இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

Advertisment

கரோனா வைரஸ் பரவலுக்குப் பின் மதுக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால், கரோனா பரவல் அதிகரிக்கலாம் என அச்சம் எழுந்துள்ள நிலையில், பல மாநிலங்களிலும் மது வகைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து ஹோம் டெலிவரி செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஸ்விக்கி அல்லது சோமாட்டோ நிறுவனங்களே இந்தச் சேவையை வழங்கி வருகின்றன. அந்த வகையில், மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் துறையில் கால்பதித்துள்ளன அமேசான் மற்றும் பிக் பாஸ்கெட் நிறுவனங்கள். இந்த இரு நிறுவனங்களும் மேற்கு வங்க மாநிலத்தில் மது வகைகளை ஹோம் டெலிவரி செய்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன. தற்போது மேற்குவங்கத்தில் அனுமதி பெற்றதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்த இந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

amazon liquor
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe