Skip to main content

அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்களுக்கு சவால் விடுத்த வாகன ஓட்டி... உத்தரபிரதேசத்தில் நடந்த சுவாரசியம்...

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

புதிய மோட்டார் வாகன சட்டம், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் அமலானது. இந்த புதிய சட்டத்தின் மூலம் வாகன விதிமீறல், ஹெல்மெட் அணியாதது, காரில் சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்டவைகளுக்காக வாகன ஓட்டிகளிடமிருந்து விதிக்கப்படும் அபராத தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. லட்சங்களில் அபராதம் கட்டிய சம்பவங்களும் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

alto car driver fined for over speeding in uttarpradesh

 

 

டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், 9 வருடங்கள் பழைய ஆல்டோ கார் ஒன்றை ஓட்டி வந்துள்ளார். இந்த காரில் வந்துகொண்டிருந்த அவரை மறித்து சோதனை செய்த உத்தரபிரதேச போலீசார் அவரிடம் ரூ.2ஆயிரத்துக்கான அபராத ரசீதை கொடுத்துள்ளனர். அப்போது அபாரதத்திற்கான காரணத்தை கேட்ட அந்த வாகன ஓட்டி மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவரது வாகனம் மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததாக வேறொரு சிக்கனலில் பதிவாகியுள்ளதாக காவலர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். 9 வருட பழமையான ஆல்டோ கார் எப்படி 144 கிலோமிட்டர் வேகத்தில் செல்லும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் காவலர்கள் கண்டுகொள்ளாத நிலையில், இதுகுறித்த புகைப்படத்தையும், போலீசார் கொடுத்த ரசீதையும் இணைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "அன்புள்ள உத்திரப்பிரதேச காவல்துறைக்கு, நான் ஓட்டி வந்தது ஆல்டோ கார். நீங்கள் வேறு ஒரு காரினை குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் வாகன எண் என்னுடைய காரின் எண்ணாகவே இருக்கிறது. நீங்கள் என்னுடைய 9 வருட பழைய ஆல்டோ காரை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை 144கிமீ வேகத்தில் ஓட்டிக்காட்டுங்கள். அதை நீங்கள் செய்துவிட்டால், நான் உங்களுக்கு ரூ.2000 ஐ செலுத்திவிடுகிறேன்'' என சவால் விடுத்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வாகன ஓட்டிகள் கவனத்திற்கு’ - சென்னை டிராபிக் போலீசார் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Attention drivers Chennai traffic police instructions

சென்னை ஈ.வே.ரா சாலையில் டாக்டர் நாயர் மேம்பால கீழ்பகுதியில் (வடக்கு) மேம்பால குறுக்கே (நாயர் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்கிரமித்து நாளை (13.04.2024) மற்றும் நாளை மறுநாள் (14.04.2024) இரவு 10.00 மணி முதல் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களிலும் இரவு 10.00 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன்படி ஈ.வே.ரா சாலையில் ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல இயலாது.

அத்தகைய வாகனங்கள் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து, நேராக ஈ.வே.ரா சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பு, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பில் வலது புறம் திரும்பி காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக செல்லலாம். எழும்பூர் காந்தி இர்வின் சாலை மற்றும் காவல் ஆணையாளர் சாலை சந்திப்பிலிருந்து (உடுப்பி பாயின்ட்), டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா சாலை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள் டாக்டர் நாயர் மேம்பாலத்தின் வழியாக செல்லலாம். எனவே வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened on The girl who asked for a lift

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.