Skip to main content

‘பிரேமம்’ இயக்குனரின் பெயரைப் பயன்படுத்தி நடிகைகளிடம் பேசிய நபர்!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020
fgh

 

 

'பிரேமம்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பெயரில் அவரை போன்று நடிகைகளுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அடிக்கடி பேசுவது மலையாள திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

இது தொடர்பாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘9746066514’, ‘9766876651’ ஆகிய தொலைபேசி எண்களில் இருந்து திரையுலகில் உள்ள பல நடிகைகளுக்கும், மற்ற பெண்களுக்கும் எனது பெயரில் என்னைப் போன்று நடித்து போலிஅழைப்புகளை செய்து வருகிறார்கள். நான் அவரை அழைக்க முயற்சித்தேன், அப்போது அவர், எனது தொலைபேசி அழைப்பை எடுத்து பேசினார். அல்போன்ஸ் புத்திரன் என்று கூறி, என்னை போல் நடித்துக்கொண்டார்.

 

நான் என்று கூறி போலி அழைப்புகளை செய்ததற்காக அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளேன். எனவே மேலே உள்ள எண்களிலிருந்து இதே போன்ற அழைப்புகள் வந்தால் தயவு செய்து கவனமாக இருங்கள். இதுபோன்ற எந்த அழைப்பையும் நீங்கள் பெற்றால், தனிப்பட்ட தகவல்கள் அல்லது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வழங்க வேண்டாம். இது ஒரு மோசடி என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனரின் பெயரில் திரையுலக நடிகைகளிடமும், மற்ற பெண்களிடம் மர்மநபர் தொலைபேசியில் பேசியது மலையாள திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“செல்போனை ஒட்டுக் கேட்பது குற்றவாளிகள் செய்யும் செயல்” - ராகுல்காந்தி எம்.பி.

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Rahul Gandhi talks about Cell phone tapping

 

இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் பயன்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்போன் உரையாடல்கள் அரசின் ஏற்பாட்டில் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சசி தரூர், மஹுவா மொய்த்ரா, ராகவ் சத்தா, பிரியங்கா சதுர்வேதி ஆகிய 4 எம்.பி.க்கள் உட்பட 10 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இந்த எச்சரிக்கை செய்தியை அனுப்பி உள்ளது.

 

இவர்கள் மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Rahul Gandhi talks about Cell phone tapping

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கும் செயலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில், “செல்போனை ஒட்டுக் கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல. குற்றவாளிகள் செய்யும் செயல்” எனத் தெரிவித்தார்.

 

கடந்த 2019 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாகச் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிய இளம்பெண் பலி!

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Woman incident while talking on cell phone while charging

 

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசியபோது செல்போன் வெடித்து இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோகிலா (வயது 33). இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில், தனது 9 வயது மகனுடன் வசித்து வந்தார். கபிஸ்தலத்தில் கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோகிலா இன்று தனது கடையில், செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது.

 

இதனால் கடை முழுவதும் தீப்பற்றி எறிந்த நிலையில், கோகிலா கத்திக் கூச்சலிட்டுள்ளார். அதே சமயம் கடை முழுவதும் தீ பரவியதால் பலத்த தீக்காயமடைந்த கோகிலா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோகிலாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பாபநாசம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியபோது செல்போன் வெடித்து இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.