Advertisment

மீண்டும் பதவி பறிப்பு; சிபிஐ இயக்குனர் விவகாரத்தில் பரபரப்பு...

fghbdf

Advertisment

சிபிஐ இயக்குனர் பொறுப்பிலிருந்து அலோக் வர்மா கடந்த ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தன்னை பதவி நீக்கம் செய்தது செல்லாது என அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அலோக் வர்மாவை மீண்டும் பணிக்கு செல்லலாம் என உத்தரவிட்டது. மேலும் அவரை பணியமர்த்துவது குறித்து சிறப்பு நியமன குழு தீர்மானித்து கொள்ளலாம் என அறிவித்தது. அதன்படி பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தனது பிரதிநிதியாக நியமித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் கொண்ட மூவர் குழு நேற்று இது பற்றி விவாதித்தது. அதில் அலோக் வர்மாவை பதவியிலிருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு 2:1 என்ற பெரும்பான்மை முடிவின் படி எட்டப்பட்டுள்ளது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்கும் முடிவை ஏற்கவில்லை என்றும் அவர் இந்த முடிவை ஒத்திப் போட வேண்டும் என்று தெரிவித்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CBI alok verma
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe