நிலக்கரி எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி... -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Allow private companies to buy coal ...

தன்னிறைவு இந்தியா என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 3 நாட்களாக திட்டங்கள் தொடர்பான அம்சங்களை விளக்கி வருகிறார். இந்நிலையில் நான்காம்நாளான இன்றுடெல்லியில் நடைபெற்றுவரும்செய்தியாளர்சந்திப்பில் தற்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தம் கொண்டு வருவது அவசியம்.தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் மோடி வகுத்துள்ள திட்டத்தின் அடிப்படை. வளர்ந்து வரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. சுயசார்பு என்பது தனிமைப்படுத்தி கொள்வதற்கான கொள்கை அல்ல.

முதலீடுகளை ஈர்க்கும் திறனைகொண்டு மாநிலங்களில் தர வரிசைப்படுத்தப்படும். வளர்ந்தபிற நாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும். தொழில் பூங்காக்கள் அமைப்பதற்காக 5 லட்சம் ஏக்கர் நிலம் கையிருப்பில் உள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் போன்ற முக்கிய சீர்திருத்தங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும். கனிமங்கள் பாதுகாப்பு,தளவாட உற்பத்தி, விமானம், விண்வெளி, அணுசக்தி துறைகளுக்கு இன்று அறிவிப்புகள் வெளியிடப்பட இருக்கின்றது.

நிலக்கரி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்படும்.நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து தன்னிறைவு பெற நடவடிக்கைப்படும்.இதற்காக நிலக்கரி கட்டமைப்பை மேம்படுத்த 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

nakkheeran app

ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதால் இதில் சீர்திருத்தங்கள் எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்புக்கு 50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும்.அலுமினிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஒவ்வொன்றாக ஏலம் விடப்படும். முதல் கட்டமாக 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும்.

மீத்தேன் வாயு திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.கனிம சுரங்க குத்தகையைபிற நிறுவனங்களுக்குமாற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது என்றார்.

corona virus India Nirmala Sitharaman
இதையும் படியுங்கள்
Subscribe