Advertisment

மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

Allotment of portfolios to Union Home Minister L Murugan

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதனையடுத்து மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

அந்த வகையில் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக பதவியேற்றுள்ள ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை, திட்டமிடல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜிதேந்திர சிங் - அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, புவி அறிவியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அர்ஜுன் ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நீதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதாப்ராவ் கணபத்ராவ் ஜாதவ் - ஆயுஷ் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெயந்த் சவுத்ரி - திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Allotment of portfolios to Union Home Minister L Murugan

மேலும் இணை அமைச்சர்கள் பதவியேற்றுள்ள ஜிதின் பிரசாத் - வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையும், ஸ்ரீபாத் நாயக் - மின் துறை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையும், பங்கஜ் சவுத்ரி - நிதித்துறையும், கிரிஷன் பால் குர்ஜார்- கூட்டுறவுத்துறையும், ராம்தாஸ் அத்வாலே - சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், ராம் நாத் தாக்கூர் - வேளாண் துறையும், நித்யானந்த் ராய் - உள்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. அனுப்ரியா பட்டேல் - சுகாதாரத்துறை, ரசாயணத் துறையும், வி சோமண்ணா - ஜல்சக்தி (நீர்வளம்), ரயில்வே துறையும் சந்திர சேகர் பெம்மாசானி - ஊரக வளர்ச்சி, தகவல் தொடர்பு துறையும், எஸ் பி சிங் பாகேல்- மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை, பஞ்சாயத்து ராஜ் துறையும், ஷோபா கரந்த்லாஜே - சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. கீர்த்தி வர்தன் சிங் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை, வெளியுறவுத் துறையும், பி.எல். வர்மா - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், சாந்தனு தாக்கூர்- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் போக்குவரத்துத்துறையும், சுரேஷ் கோபி - பெட்ரோலியத்துறை, சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Allotment of portfolios to Union Home Minister L Murugan

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை, நாடாளுமன்ற விவகாரங்கள்துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அஜய் தம்தா – சாலை போக்குவரத்துத் துறையும், பாண்டி சஞ்சய் குமார் - உள்துறையும், கமலேஷ் பாஸ்வான் - ஊரக வளர்ச்சித் துறையும், பகீரத் சவுத்ரி - வேளாண் துறையும், சதீஷ் சந்திர துபே - நிலக்கரி துறை, சுரங்கத்துறையும், சஞ்சய் சேத்- பாதுகாப்பு துறையும், ரவ்னீத் சிங் பிட்டு- உணவு பதப்படுத்துதல், ரயில்வே துறை, துர்கா தாஸ் உய்கே - பழங்குடியினர் விவகாரத் துறையும்,

ரக்ஷா காட்சே - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை, சுகந்தா மஜும்தார் - கல்வித்துறை, வடகிழக்கு விவகாரங்கள் துறை, சாவித்ரி தாக்கூர் - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, டோகன் சாஹு - நகர்ப்புற மேம்பாட்டு, வீட்டு வசதித்துறை, ராஜ்பூஷன் சவுத்ரி - ஜல்சக்தி துறை, பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா - கனரக தொழில்துறை, இரும்பு துறை, ஹர்ஷ் மல்ஹோத்ரா - சாலை போக்குவரத்து துறை, கார்பரேட் விவகாரங்கள் துறை, நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை, முரளிதர் மோஹோல் - கூட்டுறவுத்துறை, சிவில் விமான போக்குவரத்துத் துறை, ஜார்ஜ் குரியன் - சிறுபான்மையினர் விவகாரத் துறை, மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, பபித்ரா மார்கெரிட்டா - வெளியுறவுத்துறை, ஜவளித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe