kiran bedikiran bedi

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

”சி.எஸ்.ஆர் திட்டத்தில் துணைநிலை ஆளுநர் ரூபாய் 85 லட்சம் வசூல் செய்ததாகவும் ஆனால் அப்படி வசூல் செய்த தொகையை சி.எஸ்.ஆர் கமிட்டிக்கு அவர் அனுப்பவில்லை என்றும், ஆளுநர் மாளிகையை காட்டி பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார் கிரண்பேடி” என்று அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்துள்ளார் நாராயணசாமி.

Advertisment

இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள கிரண் பேடி தெரிவித்துள்ளதாவது,” சமூக பொறுப்புணர்வு நிதி அளிக்க முன்வருபவர்களுக்கு உதவிதான் செய்கிறோம். நேரடியாக கொடையாளர்களை ஒப்பந்தக்காரர்களிடம் இணைத்து பணிகள் நடத்தப்பட்டன” என்றார்.