இந்தியாவில் கரோனாபரவல் காரணமாக நீண்டநாட்களாகமூடப்பட்டிருந்த பள்ளிகள் படிப்படியாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு 6 முதல்8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில்உத்தரப்பிரதேச அரசு, பள்ளியில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, அவர்களதுகுடும்பத்தினருக்கும் கரோனாதடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதுவரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளமாநிலங்களில், ஆசிரியர்களுக்கும், பள்ளி ஊழியர்களுக்கு மட்டுமேகரோனாதடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.