கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஜூன் ஒன்றாம் தேதி வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. மேலும்மத்திய அரசு, ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ளஅனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் எனவும்அறிவித்திருந்தது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.அதேபோல் ஜூன்8-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.வழிபாட்டு தலங்களில் ஒரு நேரத்தில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.