Advertisment

பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

All party meeting chaired by Prime Minister Modi today!

Advertisment

நேற்று (29.01.2021) நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இன்று பிரதமர்தலைமையில் காணொலிவாயிலாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் இடம்பெறும் சட்ட தீர்மானங்கள், முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தித் தர அனைத்து கட்சிகளிடமும் பிரதமர் கேட்டுக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் வழக்கம் உள்ள நிலையில், தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்த பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

all party meeting modi parliment
இதையும் படியுங்கள்
Subscribe