Skip to main content

அனைத்து கட்சி கூட்டம்... அமித்ஷா அழைப்பு

Published on 14/06/2020 | Edited on 14/06/2020
 All party meeting… Amit Shah invites

 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரம், தமிழகம், டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களும் கரோனா பாதிப்பில் முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 


இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அமித்ஷா  அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் கரோனா  பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 11 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆலோசனை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Amit Sh's trip to Tamil Nadu was suddenly canceled

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்த அமித்ஷா மதுரை மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் ரோட் ஷோ மற்றும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்...” டி.ஆர்.பாலு எம்.பி.

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Concentration resolution will be brought in Parliament against Governor tR Balu

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (31.01.2024) தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ராமர் கோயில் திறப்பு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், குளிர்கால கூட்டத் தொடரின்போது 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அமலாக்கத்துறையினர் மீதான புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர். பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவடைந்த பின் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். இந்தியக் குடியுரிமைச் சட்டம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஊறு விளைவிக்கும் சட்டம் ஆகும். இந்த சட்டத்தில் இருக்கும் கருத்துகள், ஷரத்துகள் நீக்கப்பட வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கு புறம்பாக பேசக் கூடிய கருத்தாக உள்ளது. எனவே இது குறித்து பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என வலியுறுத்தினோம்.

Concentration resolution will be brought in Parliament against Governor tR Balu

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனக்கு பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் பணிகள் எதும் நடைபெறவில்லை எனவே மத்திய அரசு இது குறித்து பேச வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். சேது சமுத்திர திட்டம் குறித்தும் பேச வேண்டும் என வலியுறுத்தினோம்:” எனத் தெரிவித்தார்.