Advertisment

ஞாயிறன்று பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!

narendra modi

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின.

Advertisment

அதேபோல் பல்வேறு சட்டங்கள், கடும் அமளிக்கு இடையே மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகளின் அமளியைத் தொடர்ந்து, மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டு வந்தது.

Advertisment

இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கும் என மக்களவை சபாநாயகர் கடந்த 20ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் அவர்,அவை சுமுகமாக நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெறவுள்ளதாகவும்தெரிவித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க வரும் ஞாயிறன்று (28.11.2021) மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த இருப்பதாகவும், இதில்பிரதமர் மோடியும் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Parliament winter session all party meeting Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe