'கரோனா தடுப்பூசி' தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் கோவாக்சின், சைக்கோவ்- டி மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன. பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.