ADVERTISEMENT

அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

04:25 PM Jun 12, 2019 | santhoshb@nakk…

17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 17 ஆம் தொடங்குகிறது. அந்த கூட்டத்தொடரில் மக்களவைக்கு புதியதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்கின்றனர். இவர்களுக்கு மக்களவையின் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து ஜூலை 5 ஆம் தேதி மத்திய நிதி பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் சுமுகமாக கூட்டத்தொடர் நடத்தும் வகையில் மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்த கூட்டம் ஜூன் 16 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற விவாகரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை ஒருமனதாக தேர்வு செய்ய ஆலோசனை செய்யவுள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதே போல் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பல முக்கிய மசோதாக்களை அமைதியான முறையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT