Skip to main content

அமைச்சர் பதவிக்கு போட்டாப் போட்டி...டெல்லியில் குவிந்த கட்சித் தலைவர்கள்!

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

இந்தியா முழுவதும் பதிவான வாக்குகள் நாளை காலை 8.00 மணி முதல் எண்ணப்படும் நிலையில். இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. டெல்லியில் ஒரு புறம் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை, மற்றோரு புறம் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர். இதற்கிடையே  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் உத்தரப்பிரதேஷ மாநில முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மக்களவை தேர்தல் இறுதி முடிவுகளுக்கு முன்பே ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

 

ops and eps

 

 

மேலும் ஆட்சி அமைத்தால் எந்தெந்த கட்சிகளுக்கு  எந்தெந்த அமைச்சர் இலாக்கா வழங்குவது குறித்த ஆலோசனையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். எந்தெந்த கூட்டணில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது தொடர்பான இறுதி முடிவுகள் இன்று மாலை வெளியாகலாம். அதே போல் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை டெல்லியிலேயே தங்கி இருக்குமாறு காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை மாலைக்குள் வாக்குகளின் இறுதி முடிவை வைத்து எதிர்கட்சிகள் ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவரை சந்தித்து உரிமை கோரவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

rahul and sonia

 

 

காங்கிரஸ் கட்சியை பின்பற்றிய பாஜக ஆட்சி அமைக்க தேவையான ஆவணங்களை தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் முடிவுகளை பார்த்து விட்டு நாளை மாலை டெல்லி சென்று சோனியா காந்தி , ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

சார்ந்த செய்திகள்