ADVERTISEMENT

'நாட்டில் 87,526 பொதுத்துறை வங்கிக் கிளைகள்'- மத்திய அரசு!

05:08 PM Nov 25, 2019 | santhoshb@nakk…

நாட்டில் மொத்தம் 87,526 பொதுத்துறை வங்கிக் கிளைகள் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கிராமப்புறங்களில் மொத்தம் 28,815 பொதுத்துறை வங்கிக் கிளைகள் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளது. அதேபோல் தனியார் வங்கிக் கிளைகள் 32,083 செயல்படுகின்றன. 2016-2017 ஆண்டில் 2168 புதிய வங்கிக் கிளைகள் தொடங்கிய நிலையில், 2018- 2019 ஆண்டில் 438 வங்கிகள் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT



நாட்டில் மொத்தம் 1.37 லட்சம் ஏடிஎம்கள் செயல்படுவதாகவும் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் தனியார் வங்கி ஏடிஎம்கள் 69,019 உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT