ADVERTISEMENT

அகில இந்திய மருத்துவப் படிப்பு: ஓபிசிக்கு 27%  இடஒதுக்கீடு!

03:57 PM Jul 29, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அகில இந்திய இட ஒதுக்கீடு, 1986ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்தத் தீர்ப்பின்படி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அது நடைமுறையில் இருந்த நிலையில்தான், இந்த அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு ஏன் அமல்படுத்தப்படவில்லை என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. அதற்காக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில், நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைகளை நடத்தி விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, 2021 - 2022 கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்கப்படும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்., டிப்ளோமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவால் ஓபிசி பிரிவினருக்கு 1,500 இடங்களும், ஈ.டபிள்யூ.எஸ். (EWS) பிரிவினருக்கு 550 இடங்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT