Advertisment

”நான் இராஜினாமா செய்யவில்லை” - ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ அல்கா லம்பா

ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.எல்.ஏ அல்கா லம்பா, இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். ஆனால், இன்று மாலை அவர் திடீரென்று தான் இராஜினாமா செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

Advertisment

as

ராஜிவ் காந்திக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதினை திரும்ப பெற வேண்டும் என நேற்று டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்திரா காந்தி படுகொலைக்கு பின் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ராஜிவ் காந்தி நடந்துகொண்டதால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதினை திரும்ப பெற வேண்டும் என ஆம் ஆத்மீ நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் பெண் எம்.எல்.ஏ அல்கா லம்பா வெளிநடப்பு செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் தான் நான் வெளிநடப்பு செய்தேன். இதற்கான எந்தவிதமான விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். என்னுடைய கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் என்னைத் தொலைபேசியில் அழைத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யக் கோரினார். அதற்கு நான் ராஜினாமா செய்யத் தயார் என்று கூறியுள்ளேன். நாளை எனது கடிதத்தை அளிப்பேன்' என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

இது தொடர்பாக செய்தியாளர்கள் ஆம் ஆத்மி கட்சி தலைமையிடம் கேள்வி எழுப்பியபோது இது வரை யாரும் இராஜினாமா கடிதத்தை கொடுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக அல்கா லம்பாவிடம் கேட்டப்போது ”ராஜிவ் காந்தி நாட்டிற்காக நிறைய விஷயங்களை செய்திருக்கிறார். அதனால்தான் நேற்று டெல்லி சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினேன். கட்சியின் முடிவுக்கு எதிராக நின்றதால் என்னை கட்சியை விட்டு நீங்கச் சொன்னார்கள்” என்று பதில் அளித்த அவர் நான் இராஜினமா செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

alka lamba
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe