டெல்லி சாந்தினி சவுக் வாக்குச்சாவடி மையத்தில், தன்னை விமர்சித்த ஆம் ஆத்மி தொண்டரை, காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா அறைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளையும் சேர்த்து 1.46 கோடி வாக்காளர்களுக்கு 13, 750 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 2,689 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை எனவும், 545 வாக்குச்சாவடிகள் அதீத பதற்றமானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியின் மஜ்னு கா டீலா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா, ஆம் ஆத்மி கட்சி தொண்டர் ஒருவரை அறைய சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆம் ஆத்மி தொண்டரை அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆம் ஆத்மீ கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.