ADVERTISEMENT

கரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நகைக்கடையை கொள்ளையடித்த திருடர்கள்...

03:37 PM Sep 12, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நகைக்கடை ஒன்றில் மாஸ்க் அணிந்து புகுந்த திருடர்கள், கைகளில் சானிடைசர் தேய்த்து கைகளைத் தூய்மைப்படுத்திக்கொண்டு துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் உள்ள நகைக்கடை ஒன்று கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி செயல்பட்டு வந்துள்ளது. இந்த நகைக்கடையில் நேற்று வாடிக்கையாளர்கள் மூன்று பேர் நகை வாங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த கடைக்குள் மூன்று பேர் அடுத்தடுத்து மாஸ்க்குகளுடன் நுழைந்துள்ளனர். கடைக்குள் வந்தவர்களை வாடிக்கையாளர்கள் என நினைத்துக் கடை ஊழியர்கள் அவர்களுக்கு கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள சானிடைசர் கொடுத்துள்ளனர்.

சானிடைசர் தேய்த்து கைகளைச் சுத்தப்படுத்திக்கொண்ட அவர்கள், மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஊழியர்களை மிரட்டி கடையைக் கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடித்த நகைகள் 40 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் எனவும் மேலும் ரொக்கம் 40,000 ரூபாயையும் திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. மாஸ்க், சானிடைசர் என கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி நடந்த இந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT