Advertisment

"கார்ப்பரேட் தொழிலாளிகளாக விவசாயிகள் மாறும் அவலம் ஏற்படும்" - மத்திய அரசின் திட்டத்திற்கு அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு...

Advertisment

akilesh yadav opposes farmers bill

Advertisment

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயத்தை வாடகைக்குதந்துவிட்டு விவசாயிகள் தொழிலாளிகளாக மாறும் அவலம் ஏற்படும் என விவசாய மசோதா குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. விவசாயத்தை மொத்தமாக தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் தாரைவார்க்கும் சட்டதிருத்தமாக இது இருக்கும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு சந்தை முறையை அழிவை நோக்கி இட்டுச்செல்வது, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் கிடைக்கவிடாமல் செய்வது, விவசாய நிலங்கள் மீதும், விவசாயிகள் மீதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவது ஆகியவையே இந்த மசோதாக்கள் விவசாயிகள் மீது ஏற்படுத்தும் தாக்கமாக இருக்கும் எனக்கூறி எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில் இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், "இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. விவசாயிகளுக்கு எதிரான சதித்திட்டம். மிகவும் நெருக்கடியான காலத்தில் இந்த நாட்டை பாதுகாத்தவர்கள் விவசாயிகள். ஆனால் பெரிய தொழிலதிபர்களின் கைகளில் விவசாயிகளை ஒப்படைக்க சதி நடக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயத்தை வாடகைக்கு தந்து விட்டு விவசாயிகள் தொழிலாளிகளாக மாறும் அவலம் ஏற்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

akilesh yadav farmers bill
இதையும் படியுங்கள்
Subscribe