Advertisment

"133 முறை 133 கோடி மக்களிடம் தவறான வாக்குறுதிகள்" - பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்த அகிலேஷ் யாதவ்...

Advertisment

ss

பொருளாதார மீட்பு நிதி அறிவிப்பைச் சுட்டிக்காட்டிப் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளார் அகிலேஷ் யாதவ்.

Advertisment

கரோனா வைரஸ் பரவலால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் நேற்று மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவின் மொத்த ஜிடிபி -யில் சுமார் பத்து சதவீதத்தை (20 லட்சம் கோடி ரூபாய்) மக்கள் முன்னேற்றத்திற்கு ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், "முன்பு ரூ.15 லட்சம் என்று வாக்குறுதி அளித்தார் இப்போது ரூ.20 லட்சம் கோடி.

133 முறை 133 கோடி மக்களிடம் தவறான வாக்குறுதிகளை அளிக்கிறீர்கள். இப்போது உங்களை எப்படி நம்புவது?

இந்த முறை நீங்கள் அறிவித்த தொகையில் எத்தனை பூஜ்ஜியங்கள் என்று மக்கள் கேட்க மாட்டார்கள். மாறாக எத்தனை பொய் வாக்குறுதிகள் என்றுதான் கேட்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

akilesh yadav corona virus modi
இதையும் படியுங்கள்
Subscribe