ADVERTISEMENT

நாடாளுமன்ற தேர்தலில் குடும்பத்துடன் போட்டியிடும் அகிலேஷ் யாதவ்...

02:31 PM Mar 09, 2019 | kirubahar@nakk…

அடுத்து வரும் ஒருசில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முழு வேகத்துடன் நடத்தி வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்த வகையில் இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகள் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. அந்த வகையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.

இதன்படி அகிலேஷ் யாதவின் மனைவியான டிம்பிள் யாதவ் அக்கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். உத்தரப்பிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினமான நேற்று சமாஜ்வாதி கட்சி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 3 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் கன்னோஜ் தொகுதியில் டிம்பிள் யாதவ் ஏற்கெனவே 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல், 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அகிலேஷின் மனைவி மட்டுமில்லாமல் அவரது தந்தையும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் மணிபூரி தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT