ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்த பிரபல ஓவியர் மரணம்

ak

மும்பையை சேர்ந்த ஓவிய கலைஞர் அக்பர் பதம்ஸி(வயது91) ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர், கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் பிரபலமானவர். நவீன ஓவியக்கலையில் முன்னோடியாக திகழ்ந்த அக்பர் பதம்ஸி பத்மபூஷன் விருது பெற்றவர். தனது கடைசி நாட்களை கோவை பூண்டி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கழிக்க ஆசைப்பட்டு ஆசிரமவாசியாக இருந்து வந்தார்.

இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறை காரணமாக நேற்று முன்தினம் ஈஷா மையத்தில் காலமானார். இவரின் மறைவுக்கு ஈஷா ஆசிரமவாசிகள், பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் இறுதி சடங்கு ஈஷா யோகா மையத்தில் நடந்தது.

akbar
இதையும் படியுங்கள்
Subscribe