Advertisment

மகளுக்கு 3 லட்சம், மகனுக்கு 1.5 லட்சம்; அம்பானியின் அடுத்த பிரமாண்டம்...

hgjghjg

கடந்த ஆண்டின் இறுதியில் உலகையே திரும்பி பார்க்க வைத்தது இந்தியாவில் நடைபெற்ற இஷா அம்பானி - ஆனந்த் பிராமலின் திருமணம். சுமார் 710 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த திருமணம் பலரையும் வாய்பிளக்க செய்தது. இந்நிலையில் ஈஷா அம்பானியின் சகோதரரும் முகேஷ் அம்பானியின் மகனுமான ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு தரிப்பது வழங்கப்பட்டு வருகிறது. தாமரை இதழ்கள் மலர்ந்து இருப்பது போல அமைந்துள்ள வெளிப்புற அட்டையை திறந்தாள் அதில் வெள்ளியால் செய்யப்பட்ட ராதா கிருஷ்ணர் புகைப்படமும், அதனை தொடர்ந்து சில ஸ்லோகங்களும் உள்ளன. இவற்றை தாண்டி உள்ளே திறக்கும் போது நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி பெயருடன் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட பக்கம் உள்ளது. இந்த பத்திரிக்கை ஒன்றின் விலை 1.5 லட்சம் ரூபாய். இதற்க்கு முன் அவரது மகளின் திருமணத்திற்கு அடிக்கப்பட்ட பத்திரிக்கையின் விலை 3 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

aakash ambani isha ambani mukesh ambani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe