Aishwarya Rai

Advertisment

அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று அம்மநில சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.

இந்த நிலையில், அமிதாப் பச்சனின் மருமகள் மற்றும் அபிஷேக் பச்சனின் மனைவியான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை சுகாதாரத்துறை மந்திரி உறுதிப்படுத்தி உள்ளார். ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

அமிதாப்பச்சனை தொலைபேசியில் தொடர்புகொண்ட நடிகர் ரஜினி காந்த், உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அமிதாப் பச்சனும் அவரது மகனான அபிஷேக் பச்சனும் கரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார்.