ADVERTISEMENT

வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபரை அறிவித்த ஏர்டெல் நிறுவனம்!

02:05 AM Jul 25, 2019 | santhoshb@nakk…

இந்தியாவில் ரிலையன்ஸ் "ஜியோ" (JIO)நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணியில் உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் அதிக அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக ஏர்டெல் (AIRTEL), வோடாஃபோன் (VODAFONE) உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக பாதிப்பை சந்தித்தனர். மேலும், இந்த நிறுவனங்களை விட்டு வெளியேறிய வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஜியோ நிறுவனத்திற்கு மாறிவுள்ளனர். ஜியோ நிறுவனம் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அளவில் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT


இந்நிலையில் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆஃபரை வழங்கியுள்ளது. அதில் ரூபாய் 399-க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என்ற சலுகையை ஏற்கனவே வழங்கி வந்தது ஏர்டெல் நிறுவனம்.

ADVERTISEMENT


அதன் தொடர்ச்சியாக, இப்போது ரூபாய் 399 பேக் மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்பும், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. தற்போது இந்த ப்ளானில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 33 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த கூடுதல் டேட்டா சலுகை ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் மாறுபடும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் "ஏர்டெல் நன்றி ஆப்" (Airtel Thanks app) மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது போன்ற மற்றொரு ப்ளானில் ஏர்டெல் டிவி பிரீமியம் (Airtel TV Premium), விங்க் மியூசிக் (Wynk Music), ஒரு ஆண்டு இலவச நார்டன் மொபைல் செக்யூரிட்டி (Norton Mobile Security) புதிய சாதனம் ஏதேனும் வாங்கினால் ரூபாய் 2,000 வரை கேஷ்பேக் (CASHBACK) ஆகியவற்றுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின் அதிரடி சலுகையால், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் தங்கள் நிறுவனத்தில் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT