Skip to main content

தனது இடத்தை இழந்தது ஏர்டெல்!!!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018

 

 

idea

 

வோடாபோன் - ஐடியா நிறுவனத்தை இணைக்கும் இணைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால், இதுவரை அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனம் மற்றும் சந்தை மதிப்பு மிகுந்த நிறுவனம் என்ற இடத்தை பெற்றிருந்த ஏர்டெல் தற்போது அந்த இடத்தை இழந்துள்ளது. இந்த இணைப்பின் மூலம் 408 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக 'வோடபோன் ஐடியா லிமிடெட்' உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் 12 பேர் உள்ளதாகவும், இதன் தலைவராக 'குமார் மங்கலம் பிர்லா'வும் மற்றும் இதன் தலைமை செயல் அதிகாரியாக 'பாலேஷ் ஷர்மா'வும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 32.2 % ஆக உள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"வோடஃபோன் - ஐடியா நிர்வாகம் மத்திய அரசின் வசம் செல்லுமா?"- தலைமைச் செயல் அதிகாரி ரவீந்தர் தக்கார் விளக்கம்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

"Will the management of Vodafone Idea go to the Central Government?" - CEO Ravinder Thakkar Explanation!

 

வோடஃபோன் - ஐடியா நிர்வாகம் தொடர்ந்து தங்கள் வசமே இருக்கும் என்றும், இதை கையில் எடுக்க மத்திய அரசு விரும்பவில்லை என்றும் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரவீந்தர் தக்கார் தெரிவித்துளளார். 

 

வோடஃபோன் - ஐடியா நிறுவனம், அரசுக்கு செலுத்த வேண்டிய 16,000 கோடி ரூபாய் வட்டித் தொகையை வழங்க இயலாமல் நெருக்கடியில் சிக்கியது. இந்த நிலையில், அந்நிறுவனம் 16,000 கோடி ரூபாய்க்கு பதிலாக, அதே மதிப்புள்ள 35.8% பங்குகளை மத்திய அரசுக்கு வழங்கியது. 

 

இதனால் வோடஃபோன் - ஐடியாவில் அரசு பெரும்பான்மை பங்குதாரராக உருவெடுக்க உள்ளது. இதனால் வோடஃபோன் ஐடியா நிர்வாகம், மத்திய அரசின் வசம் செல்லுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தை நிர்வகிக்க விருப்பமில்லை என அரசு தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும், தற்போது உள்ள இயக்குநர் குழுவே தொடர்ந்து நிறுவனத்தைக் கவனிக்கும் எனவும், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரவீந்தர் தக்கார் தெரிவித்துள்ளார். 

 

Next Story

கழுத்தை நெறிக்கும் கடன்; திவாலாகிறதா வோடாஃபோன் - ஐடியா? தற்போதைய நிலை என்ன..?

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

 Vodafone-Idea bank loans government

 

திணறடிக்கும் கடன் சுமையால் திண்டாடிவரும் வோடாஃபோன் - ஐடியா நிறுவனம், திவாலாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம் திவாலானால் 10,000க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பர் என்பதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

 

நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடாஃபோன் - ஐடியா, திவாலாகும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம் தெரியவந்திருக்கிறது. 1.8 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதும், தற்போது அதை அடைக்க போதிய வருமானம் இல்லை என்பதும் அந்நிறுவன உரிமையாளர்களின் நிலைப்பாடு. இந்த நிறுவனத்தில் 26% உரிமையாளராக உள்ள குமாரமங்கலம் பிர்லா, தனது பங்குகளை இலவசமாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குத் தருவதாவும், அரசே வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்தை எடுத்து நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

 

இதேபோல் 45% உரிமையை வைத்திருக்கும் பிரிட்டனின் வோடாஃபோன் நிறுவனம் தனது பங்குகளையும் இலவசமாக கொடுக்கத் தயாராக இருப்பதாக வங்கிகளுக்குத் தெரிவித்துள்ளது. வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்திடம் தற்போது 350 கோடி ரூபாய் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உரிமையாளர்கள் இருப்பதாகவும் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு மட்டுமே ரூபாய் 1.50 லட்சம் கோடிக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. 

 

வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள ரூபாய் 23,000 கோடி கடனுக்கான வட்டியையோ, அசலையோ திரும்பச் செலுத்தும் வழி தெரியாமல் அந்நிறுவனம் திணறிக்கொண்டிருக்கிறது. வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்தின் ஒரு பங்கு வெறும் 6 ரூபாய்க்கு வணிகம் ஆகும் நிலை உருவாகியுள்ளது. இந்நிறுவனத்துக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குவதால், வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் திவாலாகுமா, அதை மீட்க அரசு தலையிடுமா என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது. 

 

ஒரு காலகட்டத்தில் இந்தியாவில் 14 டெலிகாம் சேவை நிறுவனங்கள் இருந்தன. கடும் போட்டி காரணமாக ஜியோ, ஏர்டெல் ஆகிய இரண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்கள், அரசு தரப்பில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் என டெலிகாம் துறை தற்போது சுருங்கிவருகிறது. வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்தின் டெலிகாம் சேவையை இந்திய டெலிகாம் வாடிக்கையாளர்களில் 23% பேர் பயன்படுத்திவரும் நிலையில், இந்நிறுவனம் திவாலானால், இவர்களின் செல்ஃபோன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.