Advertisment

இறங்கி அடிக்கும் ஏர்டெல்!!!

airtel

ஜியோ வருவதற்கு முன்புவரை ஏர்டெல் அதிக சந்தையை தன்னிடம் வைத்து இருந்தது. ஜியோ வருகைக்கு பிறகு பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களை, சந்தையில் தற்காத்துக்கொள்ளவே திணறிவந்தது. அதற்கு முன்வரை இருந்த அதிக கட்டணத்திட்டங்களை எல்லாம் முன்னனி நிறுவனங்களான 'ஏர்டெல் மற்றும் வோடஃபோன்' தனது ரீ-சார்ஜ் திட்டங்களில் பெரும் மாறுதல்களை கொண்டுவந்து, கிட்டத்தட்ட ஜியோவின் விலைக்கு நிகராகவே தங்களது விலையில் மாற்றம் செய்தனர். அதன் ஒரு நடவடிக்கையாகஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் தனது 196 ரூபாய் 'ஃபாரின் பாஸ்' (foreign pass)என்னும் சர்வதேச ரோமிங் திட்டத்தை அறிமுகம் செய்தது. தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு 'டாக் டைம் மற்றும் இன்டர்நெட்' (Talk time & Internet)இரண்டையும்சேர்த்துஒரே 'ரீ-சார்ஜில்' பெறும் வகையில் புதிதாக35 ரூபாய்,65 ரூபாய்மற்றும் 95 ரூபாய்என்றுமூன்று ரீ-சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.இந்த திட்டத்தைமுதல் கட்டமாக பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் உ.பி மேற்கு ஆகிய மூன்று பகுதிகளில் அறிமுகம் செய்து இருப்பதாகவும், மேலும் இன்னும் சில வாரங்களில்இந்தியாமுழுவதும்இந்த திட்டம்கொண்டுவரப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலத்தைப் பொறுத்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Advertisment

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

airtel roaming jio New plan vodafone india
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe