ADVERTISEMENT

வாடிக்கையாளர்களுக்கு "லைப் இன்சூரன்ஸ் பாலிசி திட்டம்" ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு!

05:45 PM May 10, 2019 | santhoshb@nakk…

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான 'ஏர்டெல் நிறுவனம்' (AIRTEL) தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் படி முதல் திட்டத்தில் ரூபாய் 129 க்கு ரீ-சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபியாக இருந்த டேட்டாவை 2ஜிபியாக உயர்த்தியுள்ளது. அதே போல் மற்றொரு திட்டத்தில் ரூபாய் 249 க்கு ரீ-சார்ஜ் செய்தால் ரூபாய் 4 லட்சத்திற்கு லைப் இன்சூரன்ஸ் பாலிசி (LIFE INSURANCE POLICY VALUE 4 LAKHS) வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு திட்டத்தையும் முழுமையாக பார்க்கலாம்.

ADVERTISEMENT

ஏர்டெல் ரூபாய் 129 ரீ-சார்ஜ்க்கான திட்ட விவரங்கள்
இந்த திட்டத்தில் ரூபாய் 129 க்கு ரீ-சார்ஜ் செய்தால் உங்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவும், நாள் ஒன்றுக்கு 100 சாதாரண மெசேஜ்களும் , அளவற்ற தொலைப்பேசி அழைப்புக்களையும் வழங்கியுள்ளது. இதன் வேலிடிட்டி நாட்கள் 28 நாள் ஆகும். அதே போல் ஏர்டெல் டிவி மற்றும் வின்க் மியூசிக் ஒரு மாத சந்தாவை ஆகிய இரண்டிற்கும் ஒரு மாத சந்தாவை இலவசமாக வழங்கியுள்ளது.

ADVERTISEMENT


ஏர்டெல் ரூபாய் 249 ரீ-சார்ஜ்க்கான திட்ட விவரங்கள்
இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் மெசேஜ் , அழைப்புகளில் எந்த வித மாற்றமும் கொண்டு வராத ஏர்டெல் நிறுவனம் , ரூபாய் 4 லட்சத்திற்க்கான "லைப் இன்சூரன்ஸ்" வழங்கப்படும் எனவும், அதை ஹெச்டிஎப் லைப் மற்றும் பாரதி ஆக்சா நிறுவனம் மூலம் வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் இந்த திட்டத்தில் ஏர்டெல் டிவி , வின்க் மியூசிக் சந்தா , நீங்கள் புது மொபைலை வாங்கினால் ரூபாய் 2000 வரை தள்ளுபடி மற்றும் ஒரு வருட நார்டன் செக்கியூரிடி உள்ளிட்ட சலுகைகளை வழங்கவுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லைப் இன்சூரன்ஸ் பாலிசியை வாடிக்கையாளர்கள் பெற சில விதிமுறைகளை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்களின் வயது 18 முதல் 54 வரை இருக்க வேண்டும். அதே போல் இந்த திட்டத்தில் கீழ் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். மேலும் இந்த இன்சூரன்ஸ் பாலிசியை மொபைல் மூலம் விண்ணப்பிக்கலாம்.அதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலும் , ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கும் சென்று வாடிக்கையாளர்கள் இந்த லைப் இன்சூரன்ஸ்க்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைக்களை போட்டி போட்டு வழங்கும் நிலையில் ஏர்டெல் நிறுவனம் இத்தகைய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT