ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூபாய் 92,000 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு. இந்நிறுவனங்களிடம் மத்திய அரசு ரூபாய் ரூபாய் 1.33 லட்சம் கோடி கேட்ட நிலையில், ரூபாய் 93,000 கோடி வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருவாயை குறைத்து காட்டியதாக மத்திய அரசு குற்றச்சாட்டு. புதிய தொலைத்தொடர்பு கொள்கையில் வருவாயின் ஒரு பகுதியை நிறுவனங்கள் மத்திய அரசுடன் பகிர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.